Vijay - Favicon

யாழில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் மாணவர்கள் – காவல்துறை உடனடி நடவடிக்கை!


பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருகின்றது.


இது தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்

யாழில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் மாணவர்கள் - காவல்துறை உடனடி நடவடிக்கை! | Sexual Harassment Scl Student Police Investigation

குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும், அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து, அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வருவதுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வருகின்றனர்.


இவை குறித்த தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *