Vijay - Favicon

ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்தது – பயணிகள் கவலை (படங்கள்)


காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.

இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

படகுப் பயணம் தடை

சேதமடைந்துள்ள பாதைப் படகு திருத்தம் செய்யப்படவுள்ளமையால் சில தினங்கள் பாதைச் சேவை தடைப்படும் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் படகுப் பயணமும் தடைப்பட்டுள்ளமை குறத்து பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விரைவாக இதைத் திருத்தம் செய்து தமது சீரானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *