Vijay - Favicon

கைதான வசந்த முதலிகே தொடர்பில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் முற்படுத்துமாறு உயர் நீதிமன்றம், இன்று (10) இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.


அவரை, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அடிப்படை உரிமைகள் மீறல் மனு

கைதான வசந்த முதலிகே தொடர்பில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Sc Orders Produce Wasantha Mudalige In Court

அரசியலமைப்பின் 12(1), 13(1) மற்றும் 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை ஜனவரி 31ஆம் திகதி பரிசீலிக்கவும் நீதியர்சர்களான விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய குழாம் தீர்மானித்தது.

வசந்த முதலிகே

கைதான வசந்த முதலிகே தொடர்பில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Sc Orders Produce Wasantha Mudalige In Court


கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மற்றும் இரண்டு மாணவர் தலைவர்களை காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டார்.


ஒருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், முதலிகே மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *