Vijay - Favicon

அமெரிக்காவைக் குறிவைத்து நகரும் ரஷ்ய இராணுவம் – புடினின் அதிரடி..!


ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தனது இராணுவ தளங்களை நிறுவிக்கொண்டு இருக்க உண்மையான களமுனை அமெரிக்காவை நோக்கி நகர்த்தப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உலக அரங்கில் பல காட்சி மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கின்றது.

அமெரிக்காவை பொருத்தவரையில் தனது யுத்தங்கள் எதனையும் தனது தேசத்தின் எல்லைகளில் அது மேற்கொண்டது கிடையாது.

அமெரிக்காவின் களமுனைகள் பெரும்பாலும் வேறு நாடுகளில் அல்லது வேறு நாடுகளின் எல்லைகளில் தான் அமெரிக்காவினால் நிறுவப்படும்.

ஆனால் எதிர்வரும் காலங்களில் இந்த நிலை மாற்றமடைந்து அமெரிக்காவின் எல்லைகளில் அல்லது அமெரிக்காவின் உள்ளேயே யுத்தங்கள் தாக்குதல்கள் நடாத்த படலாம் என்ற என்ற கோணத்தில் பல காட்சிகள் அரங்கேற ஆரம்பித்து வருகின்றன. 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *