உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையமொன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் மையம்
மேலும், இந்த அணு ஆயுதம் மையம் அணு ஆயுத பரவல் தடைச்சட்டத்தை பின்பற்றி அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.