Vijay - Favicon

சரமாரியாக 70 ஏவுகணை தாக்குதல்..! ரஷ்ய படைகள் நடத்திய பயங்கரம்


தாக்குதல்

உக்ரைனின் எரிவாயு ஆலை மற்றும் தொழிற்சாலைகள் மீது ரஷ்ய ராணுவம் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய இருப்பதாக உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.



உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் ஒன்பதாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில், ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன.



இந்நிலையில் உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் அதிகரித்துள்ளது, அந்த வகையில் உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் உள்ள எரிவாயு மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகள் மீது ரஷ்ய ராணுவம் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

70 க்கும் மேற்பட்ட ஏவுகணை

சரமாரியாக 70 ஏவுகணை தாக்குதல்..! ரஷ்ய படைகள் நடத்திய பயங்கரம் | Russia Military Launches Missiles Factory Ukraine

இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதைப்போலவே Zaporizhzhia பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய அதிபர்
அலுவலகம் தெரிவித்துள்ளது.


உக்ரைனின் நிகோபோல் நகரை சுற்றி ரஷ்ய ராணுவம் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது,

இதில் நகரின் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.



ஒடேசா மற்றும் கார்கிவ் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்புகள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் வரை படுகாயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *