Vijay - Favicon

டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் – நாட்டு மக்களுக்கு பேரிடி தகவல்


ரூபாவை வரையறையின்றி மிதக்க அனுமதித்தால் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.


நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில், பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை.

இது பல தசாப்தங்களாக நடந்து வரும் விவகாரம்.

பொருளாதார நெருக்கடி
வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாகும். இங்கு அடிப்படை தவறு அரசாங்கமோ, அமைச்சரவையோ, நிதிக் கொள்கையோ அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு

டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் - நாட்டு மக்களுக்கு பேரிடி தகவல் | Rupee Will Face Massive Fall Value Us Dollar

இதேவேளை மக்கள் நிவாரணம் கேட்கின்றனர். அதனால்தான் நான் கூறுகிறேன், என்ன கேட்கிறீர்கள் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


நீங்கள் கேட்பதை அரசாங்கம் கொடுத்தால், அது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். பிறகு உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது. அத்துடன் நாட்டிற்கும் நன்மை எதுவும் நடக்காது என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




அத்துடன் இறக்குமதி சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு மற்றும் பணத்தைக் கண்டுபிடிக்க மாற்று வழியின்மை என்பனவற்றின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ரூபாயை மிதக்க அனுமதித்தது.

இதன்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபாவாக குறைக்கும் சந்தர்ப்பம் மத்திய வங்கிக்கு கிடைத்தது.

என்ற போதும் கடன் முகாமைத்துவம் இன்றி ரூபாவை மிதக்க அனுமதித்தால் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவிற்கு சென்றே நிற்கும்.




இறுதியில் எடுக்க வேண்டிய முடிவுகளை முதலிலேயே எடுப்பது சரியில்லை. அதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளா



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *