“தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிக்கோளானது அகன்ற தமிழீழம். தமிழ் நாட்டையும் அவர்கள் தமது தாயகமாக கருதுகின்றார்கள்.
எனவே தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கின்றார்கள். இது இந்தியாவினுடைய ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு பிரச்சினை”
இதனால், தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்கு எதிரான இந்தியாவின் தடை தொடர்கிறது என்கிறார் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு மீதான இந்தியாவின் தடைக்கு பிரதான காரணமாக உள்துறை அமைச்சால் 2010, 2012, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் கொடுத்த – கொடுக்கப்பட்டு வருகின்ற காரணமும் இப்படியாகத் தான் என அவர் கூறுகிறார்.