Vijay - Favicon

நடுவர் மீது ஆத்திரமடைந்த ரொனால்டோ செய்த செயல் – வைரலாகும் காணொளி


ஆட்டத்தின் பாதியில் நடுவர் விசில் அடித்ததால், ரொனால்டோ கையில் தூக்கி உதைத்த காணொளி தற்போது வைரலாக பரவிவருகிறது.


அல் நஸர் அணி 3 -1 என்ற கோல் கணக்கில் அப்ஹா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் கோல் அடிக்க ரொனால்டோ எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

கோபத்தில் ரொனால்டோ 

நடுவர் மீது ஆத்திரமடைந்த ரொனால்டோ செய்த செயல் - வைரலாகும் காணொளி | Ronaldo Angry Moments Refugee Fight Video

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் ரொனால்டோவிடம் பந்து வந்தது. அதனை அவர் வேகமாக எடுத்துச் சென்ற சமயத்தில் கள நடுவர் விசில் ஊதி முதல் பாதி முடிந்துவிட்டதாக கூறினார்.

இது ரொனால்டோவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் பந்தை கையில் தூக்கி உதைத்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

இதனால் நடுவர் அவருக்கு உடனடியாக மஞ்சள் அட்டை காண்பித்தார்.

தற்போது இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.



முன்னதாக, அல்-இத்திஹாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ரொனால்டோ தண்ணீர் போத்தல்களை கோபத்தில் எட்டி உதைத்த சம்பவம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *