இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போல் வசிக்கும் கொழும்பு 07, மல்பராவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் திருடன் நுழைந்து சுமார் 03 இலட்சம் பெறுமதியான சொத்துக்களை திருடி சென்றுள்ளான்.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (06) அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
சொத்துக்கள் கொள்ளை
தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து நாணயம் மற்றும் 10,000 இலங்கை ரூபா என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பல சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூதரகத்திற்கு வெளியே ஒரு காவலரும், உள்ளே ஒரு தனியார் பாதுகாவலரும் இருக்கும் போதே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.