Vijay - Favicon

தோனியின் இடத்தை பிடித்தார் ரிங்கு சிங்..!


ஐபிஎல் வரலாற்றில் 20ஆவது ஓவரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற தோனியின் சாதனையை ரிங்கு சிங் முறையடித்துள்ளார்.

நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில், முதலில் குஜராத் அணி துடுப்பெடுத்தாடியது.

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 ஆட்டமிழப்புக்கு 204 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தோனியின் சாதனை

இதனையடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இப்போட்டியில், வெங்கடேஷ் ஐயர், நிதிஸ் ராணா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டிருந்தது.

அப்போது, ரிங்கு சிங் தொடர்ந்து 5 ஆறு ஓட்டங்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து அசத்தியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

கொல்கத்தா வீரர் ரிங்கு சிங், குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில், தொடர்ச்சியாக 5 ஆறு ஓட்டங்களை அடித்து அணியின் வெற்றிக்கு காரணமானார்.

இதனையடுத்து, ஐபிஎல் வரலாற்றில் 20ஆவது ஓவரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் (30) என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக, 2019ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 20-வது ஓவரில் தோனி 26 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *