இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைவரும் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை தற்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நண்பர்கள் அனைவரின் ஆதரவும் தேவை
ஊடகவியலாளர் அஸாம் அமீன் வெளியிட்ட பதிவில், இலங்கை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மீண்டு வரும் சுற்றுலாத் துறைக்கு உதவ நம் நண்பர்கள் அனைவரின் ஆதரவும் தேவை.
இது ஒரு கடினமான ஆண்டு.
ஆனால், சில நேர்மையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி என தெரிவித்து முன்னாள் வீரர் குமார் சங்ககாராவை குறிப்பிட்டிருந்தார்.
Thanks you @KumarSanga2 I urge everyone to #VisitSriLanka to help our recovering tourism sector #SriLankaCan https://t.co/2DakJIsVfR
— Sanath Jayasuriya (@Sanath07) September 17, 2022
குமார் சங்ககாராவுக்கு எனது நன்றிகள்
இந்த நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான சனத் ஜெயசூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மீண்டு வரும் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு உதவ அனைவரும் வருகை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் மற்றும் குமார் சங்ககாராவுக்கு எனது நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார்.