கியூஆர் விதிமுறைகளை மீறி எரிபொருள் விநியோகம் செய்தமைக்காக 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடை
இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரு வாரத்திற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடை எதிர்வரும் 11 ஆம் திகதி நிறைவடையவுள்ளதால், 12 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.