யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் மதமாற்ற சபை ஒன்று மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் ஒன்றினை நடத்துவதற்கு அனுமதி கேட்பதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஊடக அறிக்கையில் மேலும், முதல்வர் சைவப் புலவர் பரமேசுவரன், கிறிஸ்தவ மதமாற்ற சபையினருக்கு சைவப் பாடசாலைக்குள் மதமாற்றும் முயற்சிக்கான கூட்டம் நடத்த உரிமம் கொடுத்துள்ளார். இது குறித்து சிவ சேனைக்குச் செய்தி கிடைத்துள்ளது.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
அதனைத் தொடர்ந்து சிவசேனைத் தொண்டர்கள் அங்கு சென்று வித்தியாசாலையைச் சுற்றிச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இது குறித்து, சிவன் கோயிலாருடன் சிவசேனை அமைப்பினர் சுன்னாகம் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளனர்.
அந்த வகையில் போதகரை அழைத்த காவல்துறையினர் கூட்டத்தைத் தடை செய்துள்ளார்கள் என வெளியிடப்பட்டுள்ளது.