நாடு முழுவதும் நெல் அறுவடைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், நாட்டில் ஒரு ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட அதிகூடிய விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த விளைச்சலை அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள நான்கு விவசாயிகள் பெற்றுள்ளனர்.
விளைச்சல்
பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
மூன்று விவசாயிகள் ஓர் ஏக்கருக்கு 4,500 கிலோகிராம் நெல் அறுவடை செய்துள்ளமையை விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இன்னுமொரு விவசாயி 4,000 கிலோகிராம் நெல் அறுவடையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நெல் வகை
அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட AT-362 என்ற நெல் வகையை அவர்கள் பயிரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.