Vijay - Favicon

வரலாற்றில் முதன்முறையாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்


சிறிலங்கா வரலாற்றில் முதன்முறையாக முக்கிய நிறுவனங்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


சிறிலங்கா வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இன்று (17)  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் உட்பட 420 அரசு நிறுவனங்கள் பட்டியலுக்குள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் பட்டியல்

வரலாற்றில் முதன்முறையாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல் | Ranjith Siyambalapitiya Government Institutions



2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திங்கட்கிழமை (14) சமர்ப்பித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியின்
பிரகாரம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


மேலும், அரசாங்கத்தின் கீழ் 1283 நிறுவனங்கள் உள்ளதாகவும் அவற்றில் 29 அமைச்சகங்கள் மற்றும் 99 அரசு துறைகள் காணப்படுவதாகவும்
கூறப்படுகின்றது.


இதற்குள் 25 மாவட்ட செயலகங்கள், 09 மாகாண சபைகள், 341 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதாக
நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *