Vijay - Favicon

நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் விசேட உரை – ரணில் விக்ரமசிங்க


சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



அதிபர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் கடன் வழங்குபவர்களுடனும் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்

நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் விசேட உரை - ரணில் விக்ரமசிங்க | Ranil Wickramasinghe S Special Speech Today

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *