Vijay - Favicon

அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட கட்டாய உத்தரவு!


 சிறிலங்காவின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் முன்வைக்கப்படும் போது துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதில்லை எனவும் இந்த நிலைமை காரணமாக அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அதேவேளை, வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும் தினத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருப்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்டாயமாக்கியுள்ளார்.

மேலும், பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்கள் தமக்குரிய தினங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை 5.30 வரை அந்த பணிகளுக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவது கட்டாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *