Vijay - Favicon

ராஜீவ் கொலை வழக்கு – விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறிலங்கா திரும்ப முடியுமா – தாயாரின் நெகிழ்ச்சி பதிவு


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை
வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து
வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.


இந்நிலையில் அந்த ஆறு பேரில், இலங்கை குடிமக்களாக
உள்ள நால்வர் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா, என்ற வினா
எழும்பியுள்ளது.


தற்போது விடுதலை உத்தரவு வழங்கப்பட்டவர்களில் நளினியின்
கணவரான முருகன் என்றழைக்கப்படும் சிறிகரன், சாந்தன், றொபேட்
பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச்
சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஈழத் தமிழர்கள்

ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறிலங்கா திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு | Rajivgandhi Murder Case Ind Court Release Convicts


இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சிறிலங்கா
கடவுச்சீட்டை கொண்டவர்களாகவும் ஏனைய இருவரும்
தமிழகத்திற்கு அகதி தகுதிநிலை கொண்டவர்களாகவும் உள்ளனர்.


இவர்கள் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா
என்ற வினாக்களும் அவர்களை சிறிலங்கா அரசாங்கம்
அனுமதிக்குமாக என்ற வினாக்கள் எழுந்துள்ளன.


இந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனின்
அன்னை தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனுக்கு கிட்டிய
விடுதலை குறித்து தாயார் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வைத்து எமது
செய்திப்பிரிவிற்கு அவர் தனது உருக்கமான கருத்துக்களை இவ்வாறு
வெளியிட்டிருந்தார்.

மகனுக்கு கிட்டிய விடுதலை 

திருமாவளவன் 


இதேவேளை, விடுதலையான ஆறு பேரில் 4 ஈழத் தமிழர்கள் என்பதால் அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேரையும் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *