Vijay - Favicon

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானுக்குப் பிறகு முதல்நிலை குற்றவாளி நளினியே..! வெளியாகிய குற்றச்சாட்டு


குற்றவாளி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் பின்னர் நளினிதான் முதல்நிலை குற்றவாளி என முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.



முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அந்த குற்றத்திற்கு பொறுப்பான அனைவரையும் கொண்டு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, இறுதியாக ராஜிவ் காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் வரையில் குற்றவாளிகளை அழைத்து வந்ததும் நளினிதான்.

ஒத்திகை பார்த்த நளினி

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானுக்குப் பிறகு முதல்நிலை குற்றவாளி நளினியே..! வெளியாகிய குற்றச்சாட்டு | Rajiv Gandhi Murder Ltte Prabhakaran Pottu Amman

எனவே இங்கு நளினிதான் முதலாம் நிலை குற்றவாளி எனவும் சுட்டிக்காட்டினார்.



அப்போது, முதல்நிலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அகிலன், பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் நாடு கடத்தி இங்கு அனுப்புமாறு கூறப்பட்டது.

எனினும் அவர்கள் இங்கு வரவேயில்லை. இறந்து விட்டனர். அப்போது, இங்கு நளினிதான் முதல் நிலை குற்றவாளி.



குற்றவாளிகள் அனைவரையும் இங்கு வரவழைத்து, எப்படி செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொடுத்ததுடன், அதற்கு முதல் நடந்த ஒரு கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்தார் நளினி.



அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை தீட்டுகிறார்கள், அதற்கு உடந்தையாக தமிழ்நாட்டில் இருந்தது நளினிதான் என குறிப்பிட்டுள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *