இறுதிவிடை
பிரித்தானிய வரலாற்றில் கடந்த 70 வருடங்களாக முடியாட்சி செய்த மகாராணி எலிசபெத்துக்கு பாரம்பரிய இறுதிவிடை வழங்கப்பட்டு அவரது உடலம் வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலய வளாகத்தின் முடியாட்சி கல்லறைத் தோட்டத்தில் தனிப்பட்ட நிகழ்வாக உடலப்பேழமை இன்று புதைக்கப்பட்டுள்ளது.
ராணியின் ஆட்சி முடிவைக்குறிக்கும் மரபுகள் அடங்கிய நிகழ்வுகளுக்குப் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்ரர் தேவாலயத்தில் பகல் இடம்பெற்ற அரசமுறை இறுதிநிகழ்வில் பிரித்தானியாவும் உலகமும் பிரித்தானிய வரலாற்றின் முக்கிய ஆளுமை பெண்ணான ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு விடை கொடுத்திருந்தன.
200 இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள்
200 இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் பிரதமர் போன்ற அரசாங்கத் தலைவர்கள், உயர் பதவியில் உள்ள வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் ஏனைய நாடுகளின் முடியாட்சி தலைவர்கள் உட்பட சுமார் 500 சிறப்பு விருந்தினர்கள் இந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
பிரித்தானிய மக்களும் உலக மக்களும் மறைந்த ராணிக்கு வெளிப்படுத்திய அன்பு குறித்து மன்னர் சார்ள்ஸ் நெகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,