கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர்கள் இன்று திருக்கோணமலை நகரத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரித்த வரிக்கொள்கைகளை அரசு உடன் குறைக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
அதிகரித்த வரிக்கொள்கை
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
வாழ்க்கைச் செலவுகளினால் நசுங்கிப்போயுள்ள ஊழியர் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வரி அறவீட்டை உடன் நிறுத்துக எனும் கோரிக்கையை முன்வைத்து தாம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.