மீண்டுமொரு மக்கள் எழுச்சி
அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கடமையை சரிவர செய்ய
தவறினால் மீண்டுமொரு மக்கள் எழுச்சி நாட்டில் முன்னெடுக்கப்படுமென
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க
ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை
பெற்றுக்கொடுக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஒரு
வாய்ப்பை கொடுத்துள்ளனர் என ஊடகங்களுக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க
கருத்து தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு சாதகமான நிலை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் 9
ஆம் திகதி மக்கள் பதவி விலகச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும்
மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கும் வேளையில் ரணில்
விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றார் என்பதற்காக எதிர்க்கட்சிகள்
அவரை விமர்சிக்காது இருக்குமென அதிபர் எதிர்பார்க்கக் கூடாதெனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ள வேண்டுமென்பதோடு
அவருடைய திட்டத்தை மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில்
நடைமுறைப்படுத்த வேண்டுமென பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.