இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 7 ஆம் திகதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்ணத்தை வெல்லும் அணி
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிண்ணத்தை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், தோல்வியடையும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கபடவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.