Vijay - Favicon

மாணவர்களின் மதிய உணவு பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய அதிபர்


மதிரிகிரிய, மண்டலகிரிய மகா வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் பிள்ளைகளுக்கு காலை உணவிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணத்தை அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் நிகழ்விற்கு உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.


இது தொடர்பில் பிராந்திய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒரு நாளைக்கு ஒதுக்கிய பணம்

மாணவர்களின் மதிய உணவு பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய அதிபர் | Principal Birthday Party With Money Feed Children

இந்த உணவுத் திட்டத்தின் கீழ், இப்பள்ளியின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 720 மாணவர்களின் தினசரி உணவுக்காக அரசு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் மொத்தமாக 72 000 ரூபாய் செலவிடுகிறது.


டிசம்பர் 05, 2022 அன்று அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்கு, உணவு ஒப்பந்தம் செய்தவர் பால் சாதம், கொக்கி, கட்லெட் மற்றும் பட்டாணி போன்றவற்றை சமைத்துள்ளார், மேலும் மாணவர்களின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

குறுஞ்செய்தி மூலம் வழங்கப்பட்ட அறிவித்தல்

மாணவர்களின் மதிய உணவு பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய அதிபர் | Principal Birthday Party With Money Feed Children

சம்பவத்தன்று, மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என்றும், அன்றைய தினம் மாணவர்கள் வீட்டில் இருந்து சாப்பிட ஏதாவது கொண்டு வருமாறும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் அன்றைய தினம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக வவுச்சரில் கையெழுத்திடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் கணவரும் அப்பகுதியிலுள்ள வேறொரு பாடசாலையின் அதிபர் என்பது குறிப்பிடத்தனக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *