தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் இறுதிக்கட்டப்போரின் போது உயிருடன் பாதுகாப்பாக அனுப்பப்பட்ட தகவலை அவரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியிடம் கூறியுள்ளார்.
போர் முடிந்து ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த மெய்ப்பாதுகாவலருக்கு சென்னையில் மருத்துவ உதவி வழங்கியதாகவும், மருத்துவ முடிந்து அவர் வெளிநாடு செல்லும் தருணத்தில் இந்தத் தகவலை தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் கூறுகிறார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறிய அவர், ” அவர் தப்பி விட்டார் என அனுப்பி வைத்தவன் தெரிவித்தாக” கூறியிருக்கிறார்.
மெய்ப்பாதுகாவலர் சொன்ன ரகசியம்
“நான் அண்ணாவின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் (இம்ரான் படைப்பிரிவு) மிக முக்கிய பொறுப்பில் இருந்தவன்.
அவரைக் காப்பாற்றி அனுப்புகிற போது தான் எனக்கு காயம் ஏற்பட்டது.
அவரை பாதுகாப்பாக கொண்டுபோய் ஏற்றிவிட்டு வரும் போது தான் எனக்கும் காயம் ஏற்பட்டது.
அவரைக் காப்பாற்றுவதற்காக உயிர் விட்டவர்கள் சுமார் 150 பேருக்கு மேல்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் திருச்சி வேலுச்சாமி கூறுகையில்,
“நந்திக் கடலில் மரணம் அடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக சிறிலங்கா அரசு கூறுகிறது.
அப்படி மிதந்திருந்தால் அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்தப் பழக்கம் அவர்களிடம் இல்லை.
ஆனால் இலங்கை இராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது. அதனால் அது பிரபாகரனே இல்லை.
அந்த ஏற்பாட்டைச் செய்தவர்கள் ஏதோ நோக்கத்திற்காக செய்துள்ளனர்.
எனவே, பிரபாகரன் உயிருடன்தான் இருக்கின்றார்” எனக் கூறியிருக்கிறார்.