“அனைத்து போராட்டங்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவுள்ளோம், போராட்டங்களின் மூலம் அரசாங்கத்தை எதுவும் செய்ய முடியாது.”
இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு எதிரானவர்கள்
தொடர்ந்து அவர்,
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் தீர்மானங்களால் எந்த பயனும் இல்லை எனத் தெரிந்தால் இவர்களது போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடல் போராட்டத்தினை மேற்கொண்டு பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியவர்களே தற்போது மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தொழிற்சங்கத்தினர் நாட்டு மக்களின் நலன்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கி, நாட்டிற்கு எதிராக செயற்படுகிறார்கள், மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.” இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.