நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இது தொடர்பில் கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட இரண்டு படங்கள்
சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம் தொடர்பான ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய சந்தேகநபரின் முகங்களை ஒத்திருக்கும் வகையில் வரையப்பட்ட இரண்டு படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
குறித்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர்களைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால், 0112 717 516 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 071 8591 664 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.