பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் இன்று (20) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கட்சிக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலை, அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இணைந்து செயற்படத் தயார்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் மற்றும் பலர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட ஜயரத்ன ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.