Vijay - Favicon

ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்..! கனடா சர்வதேச விமான நிலையத்தில் சம்பவம்


விமானங்கள்

கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன.


தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


தரையில் பின்னோக்கி நகர்ந்த போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்க விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும், மற்றுமொரு விமானமும் மோதிக் கொண்டுள்ளன.

ஆயுத்த நிலையில் விமானம் 

ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்..! கனடா சர்வதேச விமான நிலையத்தில் சம்பவம் | Planes Collided With Each Other

புறப்படுவதற்காக ஆயுத்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மீது மற்றுமொரு விமானம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து காரணமாக பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டதுடன் அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.


விமானம் மோதிய போது சிறு அதிர்வு ஏற்பட்டதாகவும் வேறு பாதிப்புக்கள் கிடையாது எனவும் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *