Vijay - Favicon

தீக்கிரையாகிய குடும்பங்கள் அகதிகள் முகாமில் சம்பவம்


பாலஸ்தீன நாட்டின் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.


காசாவில் உள்ள பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில்
வியாழக்கிழமை (17) ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் மரணத்திருக்கலாம் என
தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்திற்குள் அதிக அளவு பெட்ரோல் இருந்ததாகவும், இது தீ அதிகரிப்பதற்கு காரணமாக இருந்ததாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் உயிரிழப்பு

தீக்கிரையாகிய குடும்பங்கள் அகதிகள் முகாமில் சம்பவம் | Palesthin Gaza Fire Accident Mahmoud Abbas


கட்டிடத்தில் இருந்த அனைவரும் மரணித்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளரினால்  கூறப்படுகிறது.


மேலும்,இறந்தவர்களில் முழு குடும்பங்களும் உள்ளடங்குவதாக உள்ளூர் ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.


எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய துக்கம்

தீக்கிரையாகிய குடும்பங்கள் அகதிகள் முகாமில் சம்பவம் | Palesthin Gaza Fire Accident Mahmoud Abbas


மேலும், “மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இது ஒரு தேசிய துக்கம் என்றும்,
வெள்ளிக்கிழமை துக்கதினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தார்.


இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், “காயமடைந்தவர்களை (இஸ்ரேலிய) மருத்துவமனைகளுக்கு மனிதாபிமான முறையில்
வெளியேற்றுவதற்கு” தனது ஊழியர்கள் உதவுவார்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.


கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக காஸாவில் அடிக்கடி மெழுகுவர்த்திகளால் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.



காஸாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், இது உலகின் அதிக மக்கள் தொகை அடர்த்தியில் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின்
கூற்றுப்படி, காசாவில் கிட்டத்தட்ட 600,000 அகதிகள் எட்டு நெரிசலான முகாம்களில் வாழ்கின்றனர்” என அந்நாட்டு ஊடகங்கள் முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *