Vijay - Favicon

மீண்டும் அதிகரித்த எரிபொருளின் விலை – அல்லல்படும் பாகிஸ்தான் மக்கள்


பாகிஸ்தான் அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



இந்த புதிய விலை உயர்வை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.272ஆக உயர்ந்து விற்பனையாகிறது.இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.293 ஆக உயர்ந்துள்ளது.


பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.2.56 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் அந்நாட்டு மதிப்பில் 190.29 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அத்தியாவசிய பொருள்கள்

மீண்டும் அதிகரித்த எரிபொருளின் விலை - அல்லல்படும் பாகிஸ்தான் மக்கள் | Pakistan Economy Crisis Dollar Rate Petrol Price

அமெரிக்க டொலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் அந்நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பும் மிக மோசமாக குறைந்துள்ளது.

இதுவே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.



பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருள்கள், உணவு பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



விலைவாசி உயர்வால் பாகிஸ்தான் மக்கள் வாடிவரும் நிலையில், ரம்ஜான் பண்டிகையை காலத்தில் மீண்டும் விலை உயர்வு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *