கப்பல்
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் குழு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், சர்வதேச குடியேற்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் 300 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜப்பானிய கப்பலினால் மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்ததைக் கண்டறிந்த பின்னர், குழு மீட்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
லேடி R3 ரக கப்பல்
வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மியான்மர் கொடியுடன் 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கிச் செல்வதாக சந்தேகிக்கப்படும் லேடி R3 ரக கப்பல் சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, அதன் இயந்திர அறை வெள்ளத்தில் மூழ்கியது அப்போது கடல் சீற்றமாக இருந்தது.
கப்பல் அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒளிபரப்பியது.
இதனையடுத்து ஜப்பானிய கப்பலால் பாதிக்கப்பட்ட படகை அடைய முடிந்தது, பின்னர் பயணிகளை மீட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தது.
264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், செவ்வாய்கிழமைக்குள் Vung Tau சென்றடைவார்கள் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.