நுகேகொடையில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று (19) விடுதியை முற்றுகையிட்டு அங்கு இருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பாலியல் சம்பந்தப்பட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இணையத்தளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, சூம் (zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் படிக்கும் மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த விளம்பரங்களை பார்த்து நுகேகொடை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த பெண்களை அணுகியுள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள்
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மினுவாங்கொடை மற்றும் மத்துகமை பிரதேசங்களை சேர்ந்த 45 மற்றும் 43 வயதானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த பெண்கள் மிக நீண்டகாலமாக மிகவும் சூட்சுமமான முறையில் காவல்துறையினரின் கண்களில் சிக்காது குறித்த இடத்தில் பாலியல் தொழில் விடுதியை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பெண்கள் இன்று (20) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.