முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 01ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
நிகழும் மாட்சிமை தங்கிய சோபகிருதி வருடம் உத்தராயண புண்ணிய காலம் இளவேனிற்காலம் வைகாசி மாதம் 18 ஆம் திகதி (01.06.23) வியாழக்கிழமை பூர்வபட்ச துவாதசிதிதியும் சுவாதி நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய முற்பகல் 11.10 மணிதொடக்கம் 12.00 மணிவரையுள்ள சந்திரஹோரையயுடன் கூடிய சிம்ம லக்கின சுப நன்நாளிலே சுயம்பு லிங்கப்பெருமானுக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் நவதள ராஜகோபுரத்திற்கும் மஹா கும்பாபிஷேகப் பொருவிழா இடம்பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கர்மாரம்ப கிரியைகள்
இந்நிலையில் நேற்று (26)கர்மாரம்ப கிரியைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்று (27) மற்றும் நாளை (28) கிரிகைகள் இடம்பெற்று 29,30,31ஆகிய தினங்களில் எண்ணைக்காப்பு இடம்பெற்று 01.06.2023 அன்று கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
எனவே அடியவர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக கலாசாரத்தினை பேணிப் பாதுகாத்து ஆலயத்திற்கு வருகைதந்து நடைபெறும் இறை வழிபாடுகளிலும் கிரிகைகளிலும் கலந்து சுபீட்சமாக பேரானந்தப்பெருவாழ்வு வாழ வேண்டுகின்றார்கள் ஆலய முகாமைத்துவ சபையினர்.