2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாள்கள் கையளிக்கப்படும் ஒழுங்கில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.