சவுதி அரேபியாவின் கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக செல்வதாக இருந்தால், அந்நாட்டின் பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகம் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு
இதேவேளை, சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் இலங்கைக்கு பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அந்த நிர்மாணத் திட்டங்களுக்கு இலங்கை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தற்போது சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.