கண்டி மாவட்டத்தில் எங்கும் மண்ணெண்ணெய் கிடைக்காது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா – லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கறுப்புச் சந்தையிலும் காணமுடியாது என்றார்.
சிறு ஏற்றுமதிப் பயிர்களின் உற்பத்திக்கு மண்ணெண்ணெய் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட எம்.பி., இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.