Vijay - Favicon

அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்தியானந்தாவின் கைலாசா – பரபரப்பு தகவல்


கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.



தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு சர்வதேச அளவில் பேசுபொருளாக நித்தியானந்தா திகழ்ந்தார்.



அனால் நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.



இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.



ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது.

சிஸ்டர் சிட்டி மோசடி

அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்தியானந்தாவின் கைலாசா - பரபரப்பு தகவல் | Nithyananda Kailasa Island Location

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நித்தியானந்தாவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



போலி தேசமான கைலாசாவுடன் ரிச்மண்ட், விர்ஜீனியா முதல் டேடன், ஓஹியோ, பியுனா பார்க், புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.



மேலும் போலி சாமியாரான நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களை கண்டுபிடித்து வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *