Vijay - Favicon

இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பலை கைப்பற்றிய நைஜீரிய படை..!


கப்பல்

சுமார் 3 மாதங்களாக மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.



இந்த இலங்கையர்கள் தொடர்பில் நைஜீரிய தூதரக அதிகாரிகளின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அந்தக் கப்பலில் இருந்த மாலுமி, தாம் உட்பட அதிலிருந்த இலங்கையர்களைக் காப்பாற்ற அதிபர் மற்றும் அதிகாரிகளின் தலையீடுகளை கோரியுள்ளார்.

நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது  

இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பலை கைப்பற்றிய நைஜீரிய படை..! | Nigerian Army Seizes Ship 8 Srilankan Detained

இந்த கப்பல் ஓகஸ்ட் 12 அன்று ஈக்குவடோரியல் கினியா கடல் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச கடல் பகுதியில் வைத்து தமது பொறுப்பில் எடுக்கப்பட்டது.



பின்னர், அங்குள்ள துறைமுகம் ஒன்றில் சுமார் 3 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பணம் செலுத்திய பின்னரே கப்பலை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



எவ்வாறாயினும், தமது கப்பல் நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் மீண்டும் கைப்பற்றப்படவுள்ளதால், இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டை கப்பலில் இருந்த இலங்கையர்கள் கோரியிருந்தனர்.


கப்பலில் 16 இந்தியர்கள், 8 இலங்கையர்கள், ஒரு போலந்து நாட்டவர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் என மொத்தம் 26 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *