Vijay - Favicon

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை: புதிய தொலைதூர ஏவுகணை அறிமுகப்படுத்திய ஈரான்..!


தனது புதிய தொலைதூர ஏவுகணையை ஈரான் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.


தலைநகா் டெஹ்ரானில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த ஏவுகணையை அதிகாரிகள் செய்தியாளா்களுக்குக் காட்டியுள்ளனர்.



‘கொராம்ஷாா்-4’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, 1,500 கிலோ எடை கொண்ட வெடிபொருளுடன் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை: புதிய தொலைதூர ஏவுகணை அறிமுகப்படுத்திய ஈரான்..! | New Long Range Missile Launched By Iran

அந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டதன் காணொளியையும் அதிகாரிகள் வெளியிட்டனா்.

இஸ்ரேலை தனது பரம எதிரியாகக் கருதும் ஈரான், பாலஸ்தீன அமைப்புகளுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது.

தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *