Vijay - Favicon

புலம்பெயர் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள ஊக்குவிப்புத் தொகை – அரசாங்கத்தின் புதிய திட்டம்


இலங்கைக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் வௌிநாட்டு நாணயங்களுக்கான புதிய ஊக்குவிப்புத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இதன்படி, தனியொரு பணப் பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படவுள்ளது.

ஊக்குவிப்பு பணம்

புலம்பெயர் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள ஊக்குவிப்புத் தொகை - அரசாங்கத்தின் புதிய திட்டம் | New Incentive Foreign Remitta Migrant Workers Cbsl



உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து ஊக்குவிப்பு பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.



பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.



இது உரிமம் பெற்ற வங்கிகளில் பராமரிக்கப்படும் கணக்குகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு மட்டுமே பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *