மசாஜ் நிலையம் என்ற ஆயுர்வேத சிகிச்சைகளை முறைப்படுத்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுதேச மருத்துவ கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆயுர்வேத மசாஜ் நிலையம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் கணிசமான எண்ணிக்கையானது மசாஜ் நிலையமாக செயற்படுகின்றன.
தற்போதைய சட்டமுறை படி, இந்த மசாஜ் நிலையங்கள், உள்ளூர் அதிகாரசபையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் மற்றும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
மசாஜ் நிலைய பயிற்சி
பல மசாஜ் நிலையங்கள் சுற்றுலா சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டாலும் கூட, பெரும்பாலும் அவை பதிவு செய்யப்படுவதில்லை.
அதேநேரம் மசாஜ் நிலையங்களில் பணிபுரியும் பயிற்சி பெறாத ஆயுர்வேத சிகிச்சையாளர்களின் எண்ணிக்கையும் தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஆயுர்வேத திணைக்களம், ஆயுர்வேத சிகிச்சையாளர்களாக ஆவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி நிலை 4 சான்றிதழுக்கான புதிய நான்கு மாத கட்டணம் செலுத்தும் பாடத்திட்டத்தை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையாளர்களாகப் பணிபுரிபவர்களுக்கும் இந்தப் படிப்பை மேற்கொள்ளமுடியும்.
இந்தப் பயிற்சியில் தற்போது சுமார் 25 சிகிச்சை நிபுணர்கள் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் பட்டம் பெற்றவுடன் புதிய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.