Vijay - Favicon

அரை சொகுசு பேருந்துகளை நீக்குவதற்கு தீர்மானம்! – போக்குவரத்து ஆணைக்குழு


தற்போது சேவையில் ஈடுபட்டுவரும் அரை சொகுசு பேருந்து பிரிவிலுள்ள பேருந்துகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின் குறித்த பிரிவில் இருந்து இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பொது போக்குவரத்து சேவை பேருந்துகள் சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு வகைகளின் கீழ் இயங்குகின்றன.

அதிக பயணிகள்

அரை சொகுசு பேருந்துகளை நீக்குவதற்கு தீர்மானம்! - போக்குவரத்து ஆணைக்குழு | National Transport Commission Bus Owners Sri Lanka



அரை சொகுசு பேருந்துகளில் சாதாரண கட்டணத்தை விட அரைப்பங்கு அதிக கட்டணமும், சொகுசு பேருந்துகளில் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணமும் அறவிடப்படுகிறது.


அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

அப்படி இருந்தும், அரை சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.” என தெரிவித்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள்

அரை சொகுசு பேருந்துகளை நீக்குவதற்கு தீர்மானம்! - போக்குவரத்து ஆணைக்குழு | National Transport Commission Bus Owners Sri Lanka



இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில், “பயணிகளுக்கு பயனளிக்காத அரை சொகுசு சேவையை இரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.



அத்துடன், தற்போது அரை சொகுசுப் பேருந்துகளாக இயங்கும் பேருந்துகளை குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக அல்லது வழக்கமான சேவைகளாக மாற்றுமாறு பேருந்து சங்கங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.



இலங்கை போக்குவரத்துச் சபையினால் இயக்கப்படும் 4,300 பேருந்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நீண்ட தூர சேவைப் பேருந்துகளாகும்.



இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே அரை சொகுசு சேவைகளாக இயக்கப்பட்டன.

அந்தப் பேருந்துகளும் அந்தப் பிரிவில் இருந்து அகற்றப்படும்.” என இலங்கை பயணச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) பண்டுக ஸ்வரனஹன்ச தெரிவித்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *