Vijay - Favicon

விண்வெளி வீரர்களின் புதிய உடை – அசரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு


தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நாசா விண்வெளி சாா்ந்த விடயங்களில் நாளுக்கு நாள் மேலோங்கி வளர்ந்து கொண்டு செல்கிறது.



அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களுக்கான உடையை உயா் தொழில்நுட்பத்துடன் மாற்றி வடிவமைத்துள்ளது.



எதிர்காலத்தில் சந்திரனுக்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு நேர்த்தியான மற்றும் முன்பை விட flexible-லான உடையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய உடை போன்றல்லாமல், கை மற்றும் கால்களை இயல்பாக அசைக்க முடியும்.

அண்மையில் இந்த புதிய மாதிரியை வெளியிட்ட நாசா அடுத்த சில வருடங்களுக்கு இந்த உடை மாதிாியை சோதனைக்கு உட்படுத்தி பிறகு விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் என்று தொிவித்துள்ளது.

புதிய உடை

விண்வெளி வீரர்களின் புதிய உடை - அசரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு | Nasa S New Astronaut Suit

பல பாதுகாப்பு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த உடையில் பாதுகாப்பான ஹெல்மெட், வெளிச்சத்திற்காக விளக்குகள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


நாசாவின் இந்த புதிய உடை நிலவில் பெண்களும் பயணிக்க எதுவாகவும், முன்பை விட அதிகமான மக்கள் நிலவின் அறிவியலை ஆராய வசதியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.



1972-ல் வரலாற்று சிறப்புமிக்க அப்பல்லோ விண்வெளி பயணத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனுக்கு மனிதர்களைத் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் நாசாவின் முயற்சிக்கு இந்த விண்வெளி உடை கூடுதல் உந்துதலாக இருக்கும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *