பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை (10) டாக்டர் பட்டம் வழங்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பிக்க உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
கடந்த 2018 முதல் படித்த சுமார் 2 ஆயிரத்து 200 மாணவர்கள் நாளை பட்டம் பெறுகின்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கௌரவ டாக்டர் பட்டம்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கையால் கௌரவ டாக்டர் பட்டம் பெறவுள்ளார்.
இந்திய சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
அத்துடன் இளையராஜா சமீபத்தில் நியமன ராஜ்யசபா எம்.பி ஆகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் மற்றும் மிருதங்க இசையில் பல புதுமைகளை புகுத்திய உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கும் நாளை பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்குகிறார்.