Vijay - Favicon

மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கபட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு நிவாரண நிதியத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுளளன.

மக்களின் சிரமத்திற்கு முற்று

மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள்! | Mullaitivu Mallavi Hospital Donate Opening Today


குறிப்பாக மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் இரத்த சுத்திகரிப்புக்காக பெரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்ற நிலைமை காணப்படுகிறது.   

குறித்த சிறுநீரக சிகிச்சைப்பிரிவானது முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்ட போதும் அதன் செயல்பாடுகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இவ்வாறு இன்றைய தினம் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன வழங்கப்பட்டிருக்கின்றன.   

இலங்கையின் பல பாகங்களிலும் இருதய நோய் உள்ள நோயாளர்களுக்கும் ஏனைய நோயால் வாடும் நோயாளிகளுக்கு பலவிதமான மருத்து உதவிகள் மற்றும் வாழ்வதார திட்டங்கள் ஆகியன தொடர்ச்சியாக செந்தில்க் குமரன் நிவாரண நிதியத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.




மல்லாவி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *