முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலப் பகுதியில் மாவீரர்கள் பலருடைய வித்துடல்கள் விதைக்கப்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வருடம் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற ஏற்ப்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இந்நிலையில் நேற்று சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.