Vijay - Favicon

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்ற பணம் – ரணிலிடம் நாமல் விடுத்த கோரிக்கை


ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.



ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளுக்கு நாள் எம்மை குறை கூறுகின்றனர்.

மத்தள விமான நிலையம் பற்றி பேசுகிறார்கள்.

மத்தளையில் நெல் களஞ்சியம் செய்தால் எங்கே விமானங்கள் வந்து இறங்க முடியும்? விமானத்திற்கு தேவையான எரிபொருளை எவ்வாறு பெற்றுக் கொள்வது? எரிபொருளுக்கு பதிலாக நெல்லை நிரப்புவதா?

ராஜபக்ஷர்கள் ஊழல்

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்ற பணம் - ரணிலிடம் நாமல் விடுத்த கோரிக்கை | Money Taken By Rajapakses Uganda Airline Dollars

போர்ட் சிட்டி அபிவிருத்தி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தினார்கள். காரணம் தான் என்ன? ராஜபக்ஷர்கள் போர்ட் சிட்டி மூலம் ஊழல் செய்ததாக கூறுகின்றனர். விசாரணைகள் செய்து செய்து விடுவிக்கப்பட்டு மீண்டும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தாமரை கோபுரத்தின் பணிகளையும் இடைநிறுத்தினர். அதிலும் ராஜபக்ஷர்கள் ஊழல் செய்ததாக தெரிவித்தனர். பின்னர் அதுவும் பொய்யானது.



ராஜபக்ஷக்கள் உகாண்டாவிற்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *