Vijay - Favicon

ஆசை வார்த்தை காட்டி இலங்கை பெண்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜை கைது!


போலியான ஆவணங்களை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து இலங்கை பெண்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நைஜீரிய பிரஜை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர் சமூக வலைத்தளங்களில் தான் ஐரோப்பாவில் வசிக்கும் மருத்துவர், பொறியியலாளர் காண்பித்து முகநூல் ஊடாக இலங்கை பெண்களை திருமணம் செய்துக்கொள்ளவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிதி மோசடி 

சந்தேக நபர், பரிசு பொருட்களை அனுப்புவதாக கூறி, சுங்க திணைக்களத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள பணம் தேவை என தெரிவித்து பெண்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.


இதனடிப்படையில் பெண்ணொருவர் வைப்புச் செய்த பணத்தை மகரகமையில் உள்ள பணம் மீளப்பெறும் இயந்திரத்தில் (ATM) இருந்து எடுக்க சென்றிருந்த போதே குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அதேவேளை, இப்படியான நிதி மோசடி சம்பந்தமான மேலும் சில நைஜீரிய பிரஜைகளை கைது செய்வதற்காக விசாரணைகளை நடத்தி வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *